30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக நொச்சியாகம, ரனோராவ கமநல சேவைகள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் கமநல சேவை அபிவிருத்தி பிரதேச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெதிகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தண்டப்பணத்திற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அதை செலுத்த தவறினால் மேலும் 2 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 30 ஆயிரத்தையும் தண்டப்பணமாக பெற்றுக் கொள்ளுமாறும் அதனை செலுத்த தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..