விவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
'கிராமத்துடன் உரையாடல்' என்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட 'கிராமத்துடன் உரையாடல்' திட்டத்தின் 6 ஆவது கட்டம் இன்று மெதிகிரிய பிரதேச செயலக பிரிவில் உள்ள பிசோபுர கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பிசோபுர மற்றும் அதை அண்மித்த கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாக காணப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் பிசோபுர மகாவேலி ஆரம்ப பாடசாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
0 Comments
No Comments Here ..