இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் அதிபட்ச ஓட்டமாக அணித் தலைவர் தினேஸ் சந்திமால் 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்ப்பில் டெம் பெஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 421 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது
துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 228 ஓட்டங்களையும் டேனியல் லோரன்ஸ் 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தில்ருவன் பெரோனா 4 விக்கெட்களையும், லசித் அம்புல்தெனிய 3 விக்கெட்களையும் மற்றும் அசித பெர்ணான்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை விட 286 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது
0 Comments
No Comments Here ..