கொரோனா வைரஸ் காரணமாக குவைட்டில் சிக்கியிருந்த 297 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் நேற்றிரவு, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு திரும்பமுடியாதுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
விமானநிலையத்தில் வைத்து அவர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 378 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 91 பேர் கட்டாருக்கும், 47 பேர் குவைட்டுக்கும் தொழில்வாய்ப்புக்களுக்காக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..