10,Mar 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாட்டில் 887 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,076 ஆக உயர்ந்தது.

அடையாளம் காணப்பட்டவர்களில் 866 நபர்கள் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

சிறைகளில் இருந்து ஏழு பேர் தொற்றிற்குள்ளாகினர்.

வெளிநாட்டிலிருந்து வந்த 14 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,202 ஆக அதிகரித்தது.

இதேவேளை, நேற்று 769 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,984 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 66 சிகிச்சை வசதிகளில் 7,816 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 792 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.




இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு