15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

மார்பகங்களை அழகாக்கும் ஆசனங்கள்

பெண்கள் தங்கள் மார்பகத்தை அழகாக வைத்துக் கொள்ள மிகவும் முயலுகின்றனர். பெண்கள் தொய்கின்ற மார்பகத்தை சரி செய்ய சில யோகா நிலைகள் கை கொடுக்கின்றன. கடுமையான எடை இழப்பு, ஆதரவான ப்ராக்கள் அணியாமல் உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தல் மற்றும் பல கர்ப்பம் போன்ற சில காரணிகள் உங்க மார்பகத்தில் மாற்றங்களை உண்டாக்குகிறது. உங்க மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய இந்த சக்தி வாய்ந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.


புஜங்ஹாசனா அல்லது கோப்ரா நிலை

இது மிகவும் எளிமையான யோகா நிலையாகும். தரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை முன்புறம் தரையில் ஊன்றி உங்க தலையை மட்டும் பாம்பு படம் எடுப்பது போல் மேலே உயர்த்துங்கள். ஆழமான சுவாசத்தை மேற்கொள்ளுங்கள். மெதுவாக 5-10 நிமிடங்கள் என அதிகரியுங்கள்.

​விருச்சாசனம் அல்லது மரம் போன்ற நிலை

இது மரம் போன்று நிற்கும் நிலையாகும். இது மார்பகங்களின் தளர்வான தசைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. முதலில் நேராக நின்று கொள்ள வேண்டும். இப்பொழுது உங்க வலது முழங்காலை மடக்கி இடது தொடையின் உள்புறத்தில் இருக்குமாறு வைத்து கைகளை சூரிய நமஸ்காரம் செய்வது போன்று வைத்து மூச்சை இழுத்து விடுங்கள். இந்த ஆசனத்தை 30 விநாடிகள் செய்யுங்கள். இதே மா மற்றொரு காலை மாற்றி செய்யுங்கள்.

தனுராசனம் அல்லது வில் போன்ற நிலை

இது உங்க மார்பகத்தை பழைய வடிவத்திற்கு கொண்டு வர உதவுகிறது. முதலில் தரையில் குப்புற படுத்து கொள்ளுங்கள். தலையை மேலே தூக்கி உங்க இரு முழங்காலையும் மடக்கி வலது கை விரல்களால் வலது கணுக்காலையும் இடது விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு வில் போன்று வளைந்து இருக்க வேண்டும். வயிற்றை கொண்டு சமநிலையை கையாளுங்கள். இது 30 விநாடிகள் செய்யவும்.

வீரபத்ராசனம்

இது உங்கள் மார்பகத்தை அதை மீள் செய்ய உதவுகிறது. உங்க கால்களை நகர்த்தி இணையாக நில்லுங்கள். உங்கள் இடது பாதத்தை இடது பக்கமாகவும் வலது கால் உள்ளே திருப்பவும். உங்கள் இடது முழங்காலை மூச்சை உள்ளே இழுத்து வளைக்கவும். உங்கள் இரு கைகளையும் உயர்த்தி, தரைக்கு இணையாக உங்கள் தலையை இடது பக்கமாக திருப்பி உங்கள் மணிக்கட்டைப் பாருங்கள். இதை 7-10 தடவை திரும்பவும் செய்யவும். இதே மாதிரி வலது பக்கம் செய்து பழகுங்கள்.

​உஷ்த்ரானம் அல்லது ஒட்டக நிலை

இது மார்பு திறக்கும் நிலை ஆகும். இது நுரையீரல் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பலப்படுத்துகிறது. முழங்காலில் நின்று கொண்டு பிறகு அதை பின்புறமாக மடக்கி அதில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உடல், கழுத்து, முதுகு வளைத்து அவை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உங்க உள்ளங்கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதற்கு ஒட்டகம் நிற்பது போன்ற நிலை தோன்றும். 30 விநாடிகள் இந்த நிலையில் நில்லுங்கள்.




மார்பகங்களை அழகாக்கும் ஆசனங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு