இலங்கையின் முதலாவது ஆடை கைத்தொழில் பூங்கா ஏறாவூரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடம் நடைமுறைப்படுத்தும் முக்கிய பணியாக இலங்கை முதலீட்டு சபை இதனை மேற்கொள்ளும் என்று சபையின் தலைவர் சன்ஞ மொஹட்டலா தெரிவித்துள்ளார்.
275 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்காவிற்காக 30 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும்.
ஆடை உற்பத்தி மற்றும் கைத்தறி உற்பத்திக்கு தேவையான ஏனைய மூலப் பொருள் உற்பத்தியும் அங்கு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..