20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

2 இலட்சத்திற்கு லம்போஹினி – சாதனை புரிந்த இளைஞன்!

மங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 25 வயது இளைஞர் அனாஸ் பேபி. இவர் தனது வேலையை விட்டுவிட்டு திடீரென தனது சொந்த ஊருக்கு கிளம்பி வந்து விட்டர். காரணம் ஒரு கார் ஷோரூமில் நிறுத்தப்பட்டு இருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போஹினி ஹுராகேன் வகை காரைப் பார்த்தாராம். அதனால் அந்தக் காரை தானே தயாரிக்கப் போகிறேன் எனக் கூறி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இதைக் கேட்ட அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து போயுள்ளனர்.

கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையால் தனது சொந்த வீட்டை இழந்து, தந்தையையும் இழந்திருக்கும் அனாஸ் திடீரென வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டார். வந்த அவர் கடந்த ஒன்றரை வருடமாக முயன்று மினி லம்போஹினி கார் ஒன்றையும் சொந்தமாக தயாரித்து உள்ளார். இவரது சொந்த தயாரிப்பைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்து உள்ளனர்.

காரணம் 3.50 கோடி மதிப்புள்ள லம்போஹினி காரில் என்ன வசதி இருக்குமோ அது எல்லாம் இந்தக் காரிலும் இருக்கிறது. மேலும் அந்தக் காரை அச்சு எடுத்தது போலவே இவரும் மினி லம்போஹினி காரை உருவாக்கி இருக்கிறார். இதில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம் 3.50 கோடி மதிப்புள்ள லம்போஹினியை அனாஸ் வெறும் ரூ.2 லட்சத்தில் உருவாக்கி விட்டார். இதனால் பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த அனாஸ் பேபி அடிப்படையில் எம்பிஏ படித்த ஒரு பட்டதாரி. ஆனால் சிறிய வயதில் இருந்தே ஆட்டோ மொபைல் துறையில் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் சாதாரண சைக்கிளை மோட்டார் சைக்கிளாக மாற்றி பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த ஆர்வத்தை விட்டுவிட்டு மங்களூருவில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் தற்போது ரூ.2 லட்சத்தில் லம்போஹனி ஹுராகேன் வகை காரை உருவாக்கி இருக்கிறார்.

இந்தக் காரின் தயாரிப்புக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இவர் உதிரி பாகங்களை வாங்கியதாகத் தெரிவித்து உள்ளார். ஒன்றரை வருட உழைப்பில் மினி லம்போஹினி ஹுராகேன் தற்போது அனாஸ் பேபிக்கு சொந்தமாகி இருக்கிறது. கேரளாவில் இந்த வகை காரை 2 பிரபலங்கள் மட்டுமே சொந்தமாக வைத்து இருக்கின்றனர். ஒருவர் பிரபல நடிகர் பிருத்விராஜ். மற்றொருவர் கோட்டயத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சிரில்லா பிளிப். மூன்றாவதாக அனாஸ் பேபி என்பதும் குறிப்பிடத்தக்கது.




2 இலட்சத்திற்கு லம்போஹினி – சாதனை புரிந்த இளைஞன்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு