05,May 2024 (Sun)
  
CH
சினிமா

நான் இருக்கிறது கைலாசா.. லொள்ளுக்கு பஞ்சமில்லாத சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலர்

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தானம். பெரிய அளவு வெற்றி படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் சுமாரான படங்களை கொடுத்து ஹீரோ இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தான் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார் என பல கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காகத்தான் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காமெடி கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ஹீரோவாக நடித்து வருகிறாராம்.

சந்தானம் வருடத்திற்கு 10 படங்கள் நடித்தாலும் அதில் ஒன்று, இரண்டு தான் வெற்றி பெற்று வருகிறது. பிறகு எதுக்கு இந்த விஷப்பரிட்சை இவருக்கு? என பலர் கேலி கிண்டல் பேசினாலும் தொடர்ந்து தன்னுடைய முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறார் சந்தானம்.

அதற்கு பலனாக தற்போது ஏற்கனவே சூப்பர் ஹிட்டடித்த ஏ1 பட கூட்டணியில் மீண்டும் பாரிஸ் ஜெயராஜ் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே கண்டிப்பாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை ஒரு கை பார்த்து இருப்பார் என தெரிகிறது.

எதிர்பார்ப்புகளுக்கு கொஞ்சமும் குறையாமல் பாரிஸ் ஜெயராஜ் பட ட்ரெய்லர் கலகலப்பாக உள்ளது சந்தானத்திற்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கலாம் என்ற தெம்பை கொடுத்துள்ளதாம். தற்போது பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலர் தான் இணையதளத்தில் வைரலாகியுள்ளது

நித்தியானந்தாவின் கைலாசா முதல் இன்றைய இளைஞர்களின் காதல் கலாட்டா வரை சந்தானம் வச்சு செய்துள்ளார் என்ற பெயரை பார்த்தாலே தெரிகிறது. கண்டிப்பாக பாரிஸ் ஜெயராஜ் படம் சந்தானம் சினிமா கேரியரில் ஒரு வெற்றி படமாக அமையும் என நம்பலாம்.





நான் இருக்கிறது கைலாசா.. லொள்ளுக்கு பஞ்சமில்லாத சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு