29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது வைத்தியர் உயிரிழப்பு!

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் வைத்தியர் கயான் தன்தநாராயன இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி கராபிடிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

ராகம வைத்தியசாலையில் பணிபுரிந்த கயான், கொரொனா தொற்றிற்குள்ளாகியதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஆபத்தான நிலைக்கு அவர் சென்றதையடுத்து, காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பைத் தடுக்க அங்கு ECMO இயந்திரத்துடன் இணைக்கப்பட்டார்.

தற்போது இலங்கையில் வேறு எந்த மருத்துவமனையிலும் கிடைக்காத இந்த ‘எக்மோ’ இயந்திரம் உள்ள ஒரே மருத்துவமனை காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனை மட்டுமே.

செயலிழந்த நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மருத்துவர் தூண்டுதல்களை வழங்கினார்.

இருப்பினும், நுரையீரல் செயலிழப்பு காரணமாக கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நுகேகொடவின் லைசியம் இன்டர்நஷனல் பாடசாலையில் படித்த கயன் தன்தநாராயன சீனாவின் தியான்ஜின் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இந்த மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர் கம்பாஹவில் வசிப்பவர். அவரது தந்தையும் ஒரு மருத்துவர்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஒரு மருத்துவர் இறப்பது இதுவே முதல் முறையாகும்.




கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது வைத்தியர் உயிரிழப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு