தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 80, 90களில் திகழ்ந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அளித்துள்ளார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்து இயக்குகிறார்.
ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை என்கிற படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரித்த சமீர் பரத்ராம், செந்தில் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.
இந்நிலையில் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
0 Comments
No Comments Here ..