15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் சரியான பதில் வழங்கும்- கெஹலிய ரம்புக்வெல

மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இராணுவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்போது இருந்த எமது அரசாங்கத்தின் நிலைபாடு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

எமக்கிடையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இறுதியாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மாற்றமடைந்தது அப்பொழுது இருந்த வெளிநாட்டு அமைச்சரினால் 30/1 என்ற ஆலோசனைக்கு அமைய இணைய அனுசரணையுடன் நாம் தவறு செய்ததாக பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பெறுபேரையே நாம் அனுபவிக்கின்றோம் என்று அமைச்சர் கூறினார்.

அப்போதைய நிர்வாகத்தில் இருந்த அமைச்சர் திலக் மாறப்பன தமது உரையில் இந்த ஆலோசனை நாட்டின் அரசியல் அமைப்புக்கு முறன்பட்டது என்றும் அதே போன்று மீண்டும் தெரிவான எமது அரசாங்கத்தின் வெளிநாட்டு அரசாங்கத்தின் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இதில் இருந்து விலகுவது சரியானது என்பதை விரிவாக தெரிவிக்க எதிர்பார்ப்பதாகவும் இதுதொடர்பில் விரிவான வகையில் விடயங்களை சமர்பிக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும், ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.




இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் சரியான பதில் வழங்கும்- கெஹலிய ரம்புக்வெல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு