04,May 2024 (Sat)
  
CH
தொழில்நுட்பம்

6.51 இன்ச் டிஸ்பிளே; டூயல் கேம்; 4000mAh பேட்டரியுடன் நோக்கியா 1.4 அறிமுகம்!

நோக்கியா பிராண்ட் உரிமதாரர் எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனாக நோக்கியா 1.4 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 1.3 அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வருகிறது.

சிங்கிள் ரியர் கேமராவுடன் வந்த நோக்கியா 1.3 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் 3,000 எம்ஏஎச்-ஐ விட பெரிய, 4,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

புதிய நோக்கியா 1.4 கூகுளின் ஆண்ட்ராய்டு கோ திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் சிங்கிள் 100% சார்ஜில் இரண்டு நாட்கள் வரை பயன்பாட்டை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனின் விலை:

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 1 ஜிபி ரேம் + 16 ஜிபி ரேம் மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7,200 க்கு அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜகளிலும் வருகிறது, அவைகளின் அதிகாரப்பூர்வ விலைக் குறியீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது, பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ எடிசனுக்கு மேம்படுத்தப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் 20: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் 6.51 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவை உள்ளது. ஹூட்டின் கீழ், கடந்த ஆண்டு நோக்கியா 1.3 மாடலில் காணப்பட்ட அதே குவால்காம் 215 SoC தான் உள்ளது, அதோடு 3 ஜிபி வரையிலான ரேம் ஆதரவு கிடைக்கும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக, நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 8 எம்பி முதன்மை சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா சென்சார் உள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் ஆனது மைக்ரோ ஜி.எஸ்.டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி வரையிலானஇன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இதில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகள் உள்ளன.

போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, accelerometer, ambient light மற்றும் proximity ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் நோக்கியா ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் ஸ்டாண்டர்ட் 5W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது அளவீட்டில் 166.42x76.72x8.7 மிமீ மற்றும் 178 கிராம் எடையையும் கொண்டுள்ளது.




6.51 இன்ச் டிஸ்பிளே; டூயல் கேம்; 4000mAh பேட்டரியுடன் நோக்கியா 1.4 அறிமுகம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு