இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் புதன்கிழமை கூறியது: பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும். அதே சமயம் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.
அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் , கட்சித் தோ்தல் நடத்துவது, புதிய பதவிகள் வழங்குவது, நீக்கம் செய்வது ஆகியவற்றுக்கு பொதுச் செயலருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால், பொதுக்குழுவைக் கூட்டி, பொதுச் செயலா் பதவியையே ஒழித்திருப்பது சட்டப்படி செல்லாது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடருவார்
ஆபத்து: ஆட்சிக்கு வருவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காத்திருப்பது ஒருபோதும் நிகழப் போவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் எத்தகைய ஆபத்து நேரும் என்பதை தமிழக மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனா் என்றார் டிடிவி தினகரன்.
0 Comments
No Comments Here ..