முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், ஒரே நாடு ஒரே தேசம் என கூறி சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு சிறிய குழு யாழில் இன்று ஊர்வலமாக சென்றது.
யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நகரம் வரை ஊர்வலமாக சென்றனர்.
பாதுகாப்பு தரப்பினரின் பின்னணியில் இந்த ஊர்வலம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கஜன் இராமநாதன் தரப்பை சேர்ந்தவரும், முன்னாள் ஆவா குழு ரௌடியென தன்னை அடையாளப்படுத்தியவருமான ஒருவர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கலந்து கொண்டார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலர் தமிழ் பேசவும் சிரமப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் தூபியை அமைக்க விடமாட்டேன் என ஆவாகுழு முன்னாள் உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..