சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த இளவரசிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறையிலிருந்து வெளியே வந்த இளவரசி, பெங்களூருவில் சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் சிறையிலிருந்து விடுதலையான நிலையில், அவரது உறவினர் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..