இலங்கையின் உண்மையான தேசியக்கொடி இதுதான் என கூறி, கண்டி தலதா மாளிகையில் தனிச்சிங்க கொடியை ஏற்ற பௌத்த பிக்குவொருவர் மேற்கொண்ட முயற்சியினால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
நேற்று (4) இலங்கையின் சுதந்திர தினத்தில் இந்த சம்பவம் நடந்தது.
மெதிரிகிரிய சுகி தேரர் என்பவர் இந்த சர்ச்சைக்குரிய முயற்சியில் ஈடுபட்டார். இலங்கை தேசிய கொடியில் பல்லின அடையாளங்கள் நீக்கப்பட்டு, தனிச்சிங்கத்துடனான கொடியை அவர் கையில் எடுத்து வந்திருந்தார்.
கண்டிக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி சுதத் மாசிங்க தலைமையிலான காவல்துறை, தலதா மாளிகை நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தினர்.
கொடியை வைத்திருப்பதில் எந்த தடையும் இல்லை என்றாலும், தலதா மாளிகை வளாகத்தில் தேசியக் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் பறக்கவிட முடியாது என்று அவருக்கு காவல்துறை தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையுடன் அவர் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
மன்னர் காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்த உண்மையான சிங்கள கொடி இதுதான், இதை கட்டப் போகிறேன் என அடம் பிடித்தார்.
அந்த நேரத்தில் இப்படியொரு கொடி இருந்திருக்கலாம். ஆனால், இப்போது தேசியக் கொடி மாறிவிட்டது. முஸ்லீம் மற்றும் தமிழ் இலங்கை குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களுடன் தேசியக்கொடி உருவாக்கப்பட்டுள்ளதால், தேசியக்கொடியென்ற பெயரில் மற்றொரு கொடியைக் காண்பிப்பது அனுமதிக்கப்படாது என்று காவல்துறை கூறினர்.
அத்துடன், தலதா மாளிகை வளாகத்தில் இந்த கொடி காட்ட நீதிமன்ற தடை பெறப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டி, நீதிமன்ற உத்தரவை காவல்துறை காண்பித்தனர்.
இதன்பின்னர், சிங்களக் கொடியை பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் காட்டி, அந்தக் கொடியை காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார். மெடிரிகிரியாவின் வென். சுகி தேரோ பின்னர் பல் நினைவுச்சின்ன கோவிலுக்கு சென்றார்
0 Comments
No Comments Here ..