டெல்லியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு மூன்று மணி நேரப் போராட்டம் நடத்தவுள்ள சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார், டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவாத்சவா உள்பட பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறைகளைப் போல் இந்த போராட்டத்திலும் வன்முறைகள் நிகழாதவாறு தடுப்பதற்குரிய ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடு தழுவிய அளவில் நாளை விவசாய சங்கங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்தை முடக்கப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
0 Comments
No Comments Here ..