அமைதியாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும் தமிழ் மக்களை பாதுகாக்கவும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியவும் விரைந்து தலையிடுமாறு தத்தமது நாடுகளை வலியுறுத்தும் அதிரடி நடவடிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு அரசாங்கம் மற்றும் சிங்கள காடையர்கள் ஏற்படுத்தும் தடைகளையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.
பல்வேறு நிலைப்பாடுகளுடன் பிரிந்து செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் பல, இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து- கூட்டு செயற்பாடாக கடந்த ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு, தற்போது செயற்படுத்தி வருகின்றனர்.பேரணிக்கு நேற்று திருமலை பகுதியில் ஆணி தூவிய விவகாரம் வரை பல நாடுகளிற்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த நாடுகள், இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவும் வலியுறுத்தப்படுகின்றன.
அமைதியான எதிர்ப்பை தெரிவிக்கும் மக்களின் உரிமையை பாதுகாக்கவும், போராட்டத்தின் பின்னராக காலத்தில் அவர்களை பாதுகாக்கவும் அந்த ஆவணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் இது குறித்து தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளன.
இறுதியாக, நேற்று டென்மார்க் அரசாங்கம் அந்த நாட்டு தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு, அவர்களால் அனுப்பப்பட்ட ஆவணத்திற்கான மேலதிக புகைப்பட, காணொலி ஆதாரங்களை கேட்டுப் பெற்றுள்ளது.இதன்போது, வழங்கப்பட்ட பல்வேறு ஆதாரங்களில் நேற்று சிங்கள் காடையர்களால் ஆணி தூவப்பட்டது தொடர்பான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..