82 வயதான மூதாட்டி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய காமக் கொடூரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துருகிரிய, வல்கம பகுதியில் கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
இரண்டு பிள்ளைகளின் தாயான மூதாட்டி தற்போது தனித்து வசித்து வருகிறார். வீட்டிற்கு பக்கத்திலுள்ள ஒரு பகுதியை வாடகைக்கு விடுவது பற்றிய விளம்பரத்தை பிரசுரித்திருந்தார்.
அந்த விளம்பரத்தின் அடிப்படையில் அங்கு சென்ற 32 வயதான இளைஞன், வீட்டில் மூதாட்டி தனித்திருந்ததை அவதானித்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளான்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை அவனது பிடியில் மூதாட்டி திண்டாடியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
மூதாட்டி தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம, பிங்கெத பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது சந்தேக நபரை அதுருகிரிய போலிசார் கைது செய்தனர்
0 Comments
No Comments Here ..