இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தலைவர்களை அண்மையில் சந்தித்தவேளை நல்லிணக்க முயற்சிகளிற்கான இந்தியாவின் ஆதரவை வெளியிட்டேன்.
மேலும் தமிழ் சமூகம் உட்பட ஏனைய சமூகத்தின் அனைத்து தரப்பினரின் அபிலாஷைகளுக்கும் இடமளிக்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. இதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம், சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு சிறந்ததாக அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..