19,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவுஸ்ரேலியா மெல்பேர்னில் திரண்டு போராட்டம்

இலங்கை அரசின் சுதந்திர தின எழுச்சியை தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை நாளாக பிரகடணப்படுத்தியும் இலங்கையில் நடை பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் ஈழத்தமிழர்கள் அவுஸ்ரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று (06) பெப்ரவரி அன்று பெருந்திரளாக கூடி எதிர்ப்புகளை வெளிக்காட்டினர்.

சிங்கள பேரினவாத அரசு கடந்த 73 ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனவழிப்பிற்கு எதிராகவே இப்போராட்டம் அமைந்திருந்தது.

தொடர்ந்து தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு சிங்கள குடியேற்றங்களை அமைத்து தமிழர் பூர்வீக நிலங்களும், பண்பாடுகளும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய இனவாத அரசு இதற்காக பல்வேறு நிகழ்ச்சி நிரலூடாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.தொடர்ந்து தமிழர் எம் இருப்பினை தக்கவைத்திட போராடவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

தமிழருக்கான நீதி கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர தினம் என்பது கரிநாளாகவே கருதப்பட முடியும். இதன் ஒருகட்டமாக இலங்கையில் நடைபெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்திற்கு எமது ஆதரவுகள் இருக்கும்.எனவே இதனை இங்கை சுதந்திர தின நாள் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை நாளாக இனிவரும் காலங்களிலும் கருதி் எதிர்ப்பலைகளை வெளிகாட்டி எம் இனத்திற்கான நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்.ஜனநாயகம் பண்புகளை ஏற்று மதிக்கும் நாம் ஜனநாயமிக்கதானதொரு நீதியை சர்வதேச சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.




புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவுஸ்ரேலியா மெல்பேர்னில் திரண்டு போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு