13,Mar 2026 (Fri)
  
CH
சினிமா

ஆண்களுக்கு படுக்கையை பகிர மட்டுமே பெண்கள் தேவைப்படுகிறார்கள்-அமலாபால்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீபத்தில் ஆண்கள் சமுதாயத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மலையாள வரவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். முதல் படமே பிட்டு பட ரேஞ்சுக்கு இருந்தது. அதனை தொடர்ந்து மைனா படம் அவருக்கான பாதையை மாற்றி விட்டது. பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்தார். கேரியர் உச்சத்தில் இருக்கும் போதே பிரபல இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்த அடுத்த வருடமே விவாகரத்து வாங்கிக் கொண்டு நடையை கட்டினார் அமலாபால். அதன் பிறகு அமலாபால் சரியில்லை என அவரின் மாமனார் பல பேட்டிகளில் புகார் அளித்தார். அதன் பிறகு அமலா பால் சிறிது காலம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடகரை காதலித்து வருவதாகவும் அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வந்தன

திடீரென அவருடன் திருமணம் செய்து கொண்டு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைதளங்களில் இருந்து அதை நீக்கி விட்டு அவருடன் சண்டை கட்டி விட்டு கிளம்பி விட்டதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆண்களுக்கு படுக்கையை பகிர மட்டுமே பெண்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழு மில்லியன் பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





ஆண்களுக்கு படுக்கையை பகிர மட்டுமே பெண்கள் தேவைப்படுகிறார்கள்-அமலாபால்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு