கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கம் காராணமாக பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும் இன்றும் சில நாடுகளில் இயல்புநிலை திரும்பாமல் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மார்ச் 1 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக போர்ச்சுக்கல் நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாமதம் உள்ளதாக தெரிவித்த அவர் செப்டம்பர் மாதத்திற்குள் திட்டமிட்ட இலக்கை அடைவோம் என உறுதி தெரிவித்துள்ளார்.போர்ச்சுகலில் இதுவரை 7 லட்சத்து 78 ஆயிரத்து 369 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன
உலக செய்தி
0 Comments
No Comments Here ..