தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். அண்மையில் நடிகா் சூா்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பிரபலங்கள் வரிசையில் தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனும் தற்போது இணைந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது . இதையடுத்து பழ.நெடுமாறனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு. பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பழ.நெடுமாறன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..