28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும்- இலங்கைப்பெண்

இலங்கையில் பிறந்த ஷஸ்னா முசம்மில் இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகளே ஷஸ்னா முசாமில். அவர் தற்போது இங்கிலாந்தில் குடியிருக்கிறார்.

டென்பிக் ஈஸ்ட், ஃபென்னி ஸ்ட்ராட்போர்ட், வாட்டர் ஈடன், லேக்ஸ் எஸ்டேட் மற்றும் மில்டன் கெய்ன்ஸ் ஆகிய பகுதிகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஷஸ்னா இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் நகரில் வசிக்கிறார். இங்கிலாந்தின் கார்டிஃப் பெருநகர பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், திறந்த பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.




இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும்- இலங்கைப்பெண்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு