இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது சதமடித்த அஸ்வின், ஆட்டத்தில் இந்திய அணியை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றார்.
3-ம் நாள் ஆட்டம் நிறைவடைந்தபிறகு தனது ஆட்டம் குறித்து அஸ்வின் கூறியது:
"இது கடந்த 3 நாள்களில் நடந்தது என்று கூறிவிட முடியாது. விக்ரம் ரத்தோருடன் நான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த 4, 5 ஆட்டங்களில் என்னுடைய பேட்டிங் சிறப்பாக வந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.சென்னையில் அடுத்த டெஸ்ட் ஆட்டம் எப்போது நடைபெறும் எனத் தெரியாது. ஆனால், நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் மீண்டும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவேனா எனத் தெரியாது.
கடந்த காலங்களில் நான் இந்தியாவில் சதமடித்தபோதெல்லாம் இஷாந்த் சர்மா உடன் இருந்திருக்கிறார். எனவே, சிராஜ் வந்தவுடன் எப்படி விளையாட வேண்டும் எனத் தெரியும்.
நான் சதமடித்தபோது அவர் பூரிப்படைந்ததைப் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது. மைதானத்திலுள்ள ரசிகர்களுக்கு நன்றி. அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர்.
இரவு முழுவதும் நன்றாக தூங்குவேன். அதைப் பற்றி மட்டும்தான் சிந்திக்கிறேன். கடந்த டெஸ்ட் ஆட்டத்துக்குப் பிறகுகூட லீச்சை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றி பேசினோம். ஸ்வீப் ஷாட்களை கொண்டு வருவது பற்றி பேசப்பட்டது.
கடைசியாக 19 வயது ஸ்வீப் ஷாட் ஆடியது. அதன்பிறகு இன்று லேசாக ஸ்வீப் ஷாட்கள் ஆடினேன். திட்டம் பலனளித்துள்ளது. இது மிகவும் நல்ல நாள் எனக் கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..