15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள தீவுகள்.!

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தினால் அதிருப்தியும், அதிக எச்சரிக்கையுணர்வையுமடைந்த இந்தியா, அதிக அழுத்தங்களை பிரயோகித்து இரண்டு திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள, சீனாவின் எம்.எஸ் / சினோசர்-எடெக்வினுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன. சூரிய, காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க கலவையை இந்த ஆலைகள் பயன்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க இருந்தது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தீவுகளின் இருப்பிடங்களில் ஒன்று ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருப்பதால் இந்த திட்டத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது, அங்கிருந்து சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது.

இந்த திட்டத்திற்காக டெண்டர் வழங்கிய இந்திய நிறுவனத்தை விட சீன நிறுவனம் சிறந்த தகுதி வாய்ந்தது என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஒப்பந்தத்தை அனுமதித்து என்றும் இலங்கை அரசு குறிப்பிட்டது. எனினும், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் ஆட்சேபனை இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக ஆளுந்தரப்பின் ஒரு தரப்பினர் அழுத்தங்கொடுத்தனர்.

எனினும், பாகிஸ்தான் பிரதமரின் வருகை, சீனாவின் அதிகரித்த பிரசன்ன விவகாரங்கள் என அதிகரித்து வரும் இந்திய அதிருப்தியையடுத்து, இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை பணிந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லையென அரசு எடுத்த முடிவையடுத்து, மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் தொடர்புபடும் இந்திய நிறுவனத்திற்கு 85% பங்குகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு 49% பங்குகளையே வழக்க முன்னர் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள தீவுகள்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு