கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா தொற்றை அடுத்து ஐ டி எச் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 20 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றுகாலை வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை பேராசிரியர் சன்ன ஜெயசுமன இன்றையதினம் பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..