அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக்கூடாது என வெள்ளைமாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிசின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ். இவர் பெண்களுக்கான ஒன்-லைன் ஷொப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப் படங்களை பயன்படுத்தி தனது நிறுவனத்தின் பொருட்களை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
‘வைஸ்-பிரெசிடென்ட் அன்ரி’ என்ற ஆங்கில வாசகங்களுடன் பதிப்பு செய்யப்பட்ட ஸ்வெட் சர்ட்கள் அதிகம் விற்பனையானது.
இது தொடர்பாக முறைப்பாடுகள் வெள்ளை மாளிகைக்கு வந்தன. இதையடுத்து மீனா ஹாரிசுக்கு வெள்ளை மாளிகையின் சட்டக்குழு, அறிவுரை வழங்கி உள்ளது அதில், வெள்ளை மாளிகையின் கொள்கைப்படி துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களின் வணிகத்தையோ, சமுக வலைத்தளம் பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் மிக உயர்ந்த நெறிமுறைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.
0 Comments
No Comments Here ..