15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பிணை முறி வழக்கு விசாரணைக்கு இரண்டு ட்ரயல் எட் பார் நீதிபதி குழாம்கள் நியமனம்

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமை நியமிக்க நீதியரசர் நடவடிக்கை எடுத்துள்ளார்.அதன்படி, முதலாவது ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோரும் இரண்டாவது ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, பலல்லே மற்றும் ஆதித்ய படபந்திகே ஆகியோர் நியதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.




பிணை முறி வழக்கு விசாரணைக்கு இரண்டு ட்ரயல் எட் பார் நீதிபதி குழாம்கள் நியமனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு