தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக இன்று (18) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,164 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..