அமெரிக்காவில் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உதவியளித்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் 5 அமெரிக்கர்கள் உட்பட்ட 268 பொதுமக்களை கொலை செய்தமை தொடர்பில் மொஹமட் அன்வர் முகமது ரிஸ்கன்; மற்றும் அஹமட் மில்ஹான் ஹயத்து மொஹமட் ஆகியோர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மூன்று பிரதிவாதிகளும் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்த 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு இவர்கள் பொறுப்பாளிகள் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..