ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்கள் வரவேற்றார். அதனை தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரதமர் மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீ பெற்றார்.
அங்கு பிரதமர் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரை சந்தித்து நலன் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து அஸ்கிரி மஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அஸ்கிரி மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
0 Comments
No Comments Here ..