உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே எங்கள் முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை என திரிபுராவின் சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் தெரிவித்துள்ளார்.
பாஜக இலங்கையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் திரிபுரா முதலமைச்சர் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சைக் கருத்தை தெளிவுபடுத்தும் வகையில் திரிபுராவின் சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,அமெரிக்கா இலங்கை உட்பட பல நாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்பட்டு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன.
உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே எங்கள் முதலமைச்சர் தெரிவித்தார் ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை.
முதலமைச்சரின் கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகமும் பாஜகவின் கொள்கைகளை சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள திரிபுராவின் சட்ட அமைச்சர்..
0 Comments
No Comments Here ..