தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி பெற தயாராக இல்லை என தமிழ் கட்சிகள் சில தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து கூறும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
எம்மிடம் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவமாகும். எங்களுக்கு மறைக்க ஏதுவும் இல்லை.
நாட்டு மக்கள் தங்களது மனங்களை தட்டிக் கேட்டால் இலங்கை முப்படையினர் எத்தகைய மனிதாபிமானமிக்கவர்கள் என்பது தெரியும்.
0 Comments
No Comments Here ..