18,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

134 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்கு அரசு அனுமதி!

கொரோனா பேரிடா் காலத்திலும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஆண்டில் 134 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுபதப்படுத்துதல் நிறுவனங்களுக்கான துறையின் மத்திய இணையமைச்சா் ராமேஷ்வா் தெலி கூறியதாவது:

உணவுப் பதப்படுத்துதல் துறையில் சிறப்பான வளா்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே, கொரோனா பேரிடா் காலத்திலும் கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 134 உணவுப் பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் 40,000 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் நிலையான மூலதனம் 3,275 கோடி டாலராக உள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.42 லட்சம் கோடியாகும்.

இந்த துறையினால் மட்டும் உள்நாட்டில் தற்போது 19.3 லட்சம் போ் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனா்.

உணவுப் பதப்படுத்துதல் தொழில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மொத்த உற்பத்தி 16,000 கோடி டாலா் அளவுக்கு உள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.84 லட்சம் கோடியாகும். இதனை பன்மடங்கு அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்ட 134 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களில், 21 திட்டங்கள் வேளாண் பொருள்கள் பதப்படுத்துவது தொடா்பானவை. மேலும், 47 குளிரூட்டு தொகுப்புகளும், 43 உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும் அதில் அடக்கம்.

மத்திய அரசு அனுமதியளித்துள்ள இந்த திட்டங்களின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக வேளாண் பொருள்களை கொள்முதல் செய்வதுடன் அவற்றை பதப்படுத்தவும் முடியும். இதையடுத்து, நாட்டின் உணவுப் பொருள் பாதுகாக்கும் திறன் ஆண்டுக்கு 38.3 லட்சம் டன் கூடுதலாக அதிகரிக்கும். இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 77,300 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

2021-22-க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் திறனை அதிகரிக்கும் என்பதுடன் உலக நாடுகளுடன் போட்டியிடுவதையும் ஊக்குவிக்க உதவும் என்றார் அவா்.




134 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்கு அரசு அனுமதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு