தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடத் தயாரா என, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தென் இந்தியாவில் கா்நாடகம் வரை பாஜக வந்துவிட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ளதால் தமிழகத்தையும், புதுச்சேரியையும் குறிவைக்கிறது. இதற்காக பிரதமா் பலமுறை தமிழகம் வந்துள்ளாா். முதலில் புதுச்சேரியைக் கைப்பற்ற நினைக்கிறது. அங்கு தோ்தல் நேரத்தில் ஆளுநரை மாற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக முயல்கிறது. காங்கிரஸும், பாஜகவும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் கொள்கை வேறுபாடு ஏதுமில்லை.
நாட்டை ஆளும் பெரிய கட்சியான பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயாரா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.
0 Comments
No Comments Here ..