இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் ஐ.நாவினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இருக்கின்றார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவினுடைய போர்க்குற்ற நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையோடு எமது மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றார்கள்.ஆனால் அவ்வாறான சூழல் தற்போது அமையவில்லை ஐ.நாவினுடைய நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது வரைபிலேயே இலங்கைக்கு எதிரான சில விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களுடைய எதிர்பார்ப்பு என்பது இலங்கையை ஒரு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அங்கு சரியான முறையில் உண்மைகள் விசாரிக்கப்பட்டு, எமது மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்.













0 Comments
No Comments Here ..