18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நெடுந்தீவு நோக்கி பயணித்த மீனவர்கள் இருவர் மாயம்.!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் காவல்துறை தெரிவித்தனர்.

அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

குறிகாட்டுவானிலிருந்து நேறறு (21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்களே இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.




நெடுந்தீவு நோக்கி பயணித்த மீனவர்கள் இருவர் மாயம்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு