01,Nov 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாண தீவுகள் மின் உற்பத்தி திட்டம் -இந்தியாவின் தலையீட்டுக்கு சீன நிறுவனம் கடும் எதிர்ப்பு...

யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் மின் விநியோக திட்டத்தை அமைப்பது தொடர்பில் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட நிலையில்,அதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக குறித்த திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சினோ சோர் ஹைப்ரிட் (பெய்ஜிங்) டெக்னாலஜி கோ லிமிடெட்,( Sino Soar Hybrid (Beijing) Technology Co.Ltd)

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சர்வதேச ஏல நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக பின்பற்றும் என்றும், ஒப்பந்தக்காரரின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதாகவும், அதன் சொந்த நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச நற்பெயரை பேணும் எனவும் தெரிவித்துள்ளது.




யாழ்ப்பாண தீவுகள் மின் உற்பத்தி திட்டம் -இந்தியாவின் தலையீட்டுக்கு சீன நிறுவனம் கடும் எதிர்ப்பு...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு