வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் ஒருவர் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், கடந்த 20ஆம் திகதி பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர், “இது வீதி. இதனால் போய்வர முடியாதா?“ என இளைஞன் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளைஞனை விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்று வெற்றிலைக்கேணி சுடலை பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் சுடலை பகுதிக்கு ஓடோடி சென்றுள்ளார். அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு, தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர். மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அவர் தற்போது யாழ் போதனா மருத்துவமனை 24 ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..