மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்கள் இன்று புதன் கிழமை காலை 9 மணி முதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அங்கத்தவர்களான சுகாதார ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் முறையற்ற நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.













0 Comments
No Comments Here ..