11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

100-வது போட்டியில் இஷாந்த் சர்மா......

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் இன்று பகல்-இரவு டெஸ்ட்-ஆக தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மைதானம் இதுவாகும். 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போது கொரோனா தொற்றால் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் 55 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காண வந்துள்ளனர். முதன்முறையாக இந்த மைதானத்தில் போட்டி நடக்கிறது.

இந்த போட்டி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். போட்டி தொடங்குவதற்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

இஷாந்த் சர்மாவை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். பின்னர் விராட் கோலி அணி வீரர்களை இருவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சக வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.




100-வது போட்டியில் இஷாந்த் சர்மா......

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு