அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.
இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
விபத்தில் சிக்கிய டைகர் உட்சை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளதால்.அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
0 Comments
No Comments Here ..