15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

விழிப்புணர்வற்றவர்களுக்கான கற்கையில் கலைமாமணி பட்டம் பெற்ற யாழ் மாணவர்கள்.!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்றவர்களிற்கான சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 இதன்படி 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட சபேசன் கட்சணி மற்றும் அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோரே நேற்று இந்த பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

 சபேசன் கட்சணி அரசறிவியல் துறையிலும் விஜயகுமார் விஜயலாதன் சமூகவியல் துறையிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். சுன்னாகத்தில் இயங்கி வரும் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடையவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தொண்டு ஸ்தாபனமாகும். இவ்வாழ்வக மாணவர்கள் கல்வியில் சிறந்து உயர் பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்து வருகின்ற நிலையில் சாதனை படைத்த இரு மாணவர்களும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.




விழிப்புணர்வற்றவர்களுக்கான கற்கையில் கலைமாமணி பட்டம் பெற்ற யாழ் மாணவர்கள்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு