பேலியகொடை காவல் நிலையத்தில் வைத்து சட்ட துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காவல் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை (23) பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..