ஈழத்தமிழர்கள் பால் பேரன்பு கொண்டிருந்த தமிழகத்தின் மூத்த கம்மியூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் தனது 89ஆவது வயதில் மறைந்தார். கோவிட் தொற்றிக்கு உள்ளாகி, அதனால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்ப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் மறைந்தார்.
2008 பிற்பகுதியில் ஈழத்தில் நிலைமை மோசமடைய, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பலரை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்தி, இனவழிப்புப் போரை உடனே நிறுத்து ஈழத்தமிழ் மக்கள் அழிவைத் தடு என்று, இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்க அயராது போராடி ஈற்றில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தால் துவண்டுபோனவர்.
0 Comments
No Comments Here ..