கமலஹாசன் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுமே ஒவ்வொருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். சில படங்கள் காலம் கடந்தும் பேசும். அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன். இன்றும் படம் பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கும் திரைப்படங்களில் தேவர் மகனும் ஒன்று.
அப்படிப்பட்ட தேவர் மகன் படத்தில் ரஜினியுடன் பல பிரம்மாண்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை ஒருவர் வெறும் மூன்று நாட்கள் மட்டும் நடித்து விட்டு பின்னர் நிராகரிக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
கமல் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் கூட்டணியில் தடபுடலாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தேவர் மகன் திரைப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனி ஒரு கதாபாத்திரமாக அமைந்தது ரேவதியின் கதாபாத்திரம்.
குழந்தைத்தனமான அந்த கதாபாத்திரத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அதுவும் இஞ்சி இடுப்பழகி பாட்டு ஆரம்பமாகும் காட்சி எல்லாம் வேற ரகம்தான். அப்படிப்பட்ட ரேவதி கதாபாத்திரத்தில் முதன் முதலில் ஒப்பந்தமானவர் நடிகை மீனா.
மூன்று நாட்கள் மீனாவை வைத்து படப்பிடிப்பை நடத்திய படக்குழு மீனாவுக்கும் இந்த கதாபாத்திரத்திற்கும் சம்பந்தமில்லை என கமலஹாசனிடம் தெரிவிக்க உடனடியாக ஆளை மாற்றி விட்டாராம் கமல். கமலஹாசன் மீனா முகத்தில் முதிர்ச்சி இல்லை என நிராகரித்துவிட்டாராம்.
பார்ப்பதற்கு பருவ மொட்டாக இருக்கும் மீனாவை எப்படி கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் காட்டுவது என படக்குழுவினர் தவித்த தவிப்பை பார்த்துவிட்டு கமல் மாற்றியதாக தகவல். அதன் பிறகு வந்த ரேவதியும் சும்மா சொல்லக்கூடாது. நடிப்பில் அசரடித்து விட்டார்.
0 Comments
No Comments Here ..