24,Aug 2025 (Sun)
  
CH
சினிமா

7 லட்சம் லைக்குகளை குவித்த புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கிராக். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசனுக்கு பட வாய்ப்புகள் குவிய காரணமே கவர்ச்சியில் எந்த ஒரு குறையும் வைக்க மாட்டார் என்பதுதான். தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டியே பல வருடங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்து சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ருதிஹாசன் அந்த காதல் கைகூடாததால் பிரேக் அப் செய்துவிட்டு தற்போது மீண்டும் இரண்டாவது காதலரை தேர்ந்தெடுத்து அதேசமயம் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதால் படவாய்ப்புகள் தன்னுடைய கையை விட்டுப் போகக்கூடாது என்பதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் நீச்சலுடை புகைப்படம், சாதாரண புகைப்படம் என மாறி மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சு எழும்பு புடைக்க கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வரை ஏழு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




7 லட்சம் லைக்குகளை குவித்த புகைப்படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு